மனிதன் எப்போது மனிதனாகிறான் ?
மனிதர்களாகிய நாம் நம் வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை கடந்திரிக்கிறோம், அனால் எத்தனை முறை நாம் கடந்து வந்தது மனிதர்கள் தான் என்று உணர்ந்திருப்போம்? முதழலில் நாம் மனிதர்களாக இருந்திரிக்கிரோமா? அல்லது எத்தனை முறை மனிதர்களாக இருக்க முயற்சி செய்திருப்போம்?
கூறப்பட்டுள்ள இவர்களில் யாரை நமக்கு பிடிக்கும்?
- ஒருவன் எப்பொழுதும் சந்தோசமாக கவலைகளை மறந்து வாழ்கிறான்.
- மற்றொருவன் எப்பொழுதும் பொறுப்புடன் தனது எதிர்காலத்திற்காக வாழ்கிறான்.
திருமணம் ஏன்?
நாம் நமது தாயிடம் நீ தான் எனது தாய், நான் தான் உனது மகன்/மகள் என ஒப்பந்தம் போட்டு கொள்வதில்லை.தந்தைக்கான உறவை மேடை போட்டு பிரசங்கம் செய்து ஏற்று கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. சகோதரன்/சகோதரிக்கான உறவை நிரூபிக்க பத்திரிக்கை அடித்து அனைவரையும் அழைக்க வேடியதும் இல்லை. இப்படி மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி இப்படி அணைத்து உறவுகளுக்கும் நாம் ஒரு அக்ரீமென்ட்(Agreement) போட்டு கொள்வதில்லை.
ஆனால் மனைவி / கணவன் என்ற உறவுக்கு மட்டும் திருமணம் என்ற விசேஷம் வைத்து, அழைப்பிதழ் அடித்து, உற்றார் உறவினர்களை அழைத்து, விருந்து வைத்து மேடை அமைத்து தாளி/மோதிரம் என்றொன்றை உருவாக்கி , நீயும் நானும் இனி தம்பதிகள் என ஏற்றுக்கொள்கிறோம். ஒரு ஒப்பந்தம் (Agreement ) செய்து கொள்கிறோம்.. அதாவது இருவருக்கும் உண்டான காதலை மட்டும் அனைவருக்கும் உரக்க கூறவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏன்? ( சரியா, தவறா என்ற விவாதம் அல்ல இது )
தங்களது கருத்துகள் வரவேற்கப்படுகிறது..



So strange is this marital relationships...
ReplyDeleteYour post makes me think hard.