Monday, 17 October 2011

அன்று முதல் இன்று வரை..

2004 ஏப்ரல் மாசம்  நான் எனது பாலிடேக்னிக் முடிச்சுஅடுத்த மாசம் மே-  மோதல் மோதல வேலைக்கு போறேன்அதுவும் எங்கஹைதராபாத்கு.. 
ராஜபாலயத்துல இருந்து ஹைதராபாத்... எதோ எதோ கணவுகள்கற்பனைகள்... என்குட இன்னும் 3 பசங்க வேற (அலிசொடைகோகுலகுமார்சந்திரமோகன்)  .. முதல் மாசம் சம்பளம் 500 ருபாய்..  துலிப் மனோகர் - 5  ஸ்டார் ஹோடெல்ல வேலை , அதுவும் இருக்குற AC எல்லாம் துடைக்கிற   வேலை...  அதனால மதியம் சாப்பாடு அங்கயே... காலைல என்ன கிடைக்குதோ அதுதான் , பல சமயம் பிஸ்கட் தண்ணி, சில சமயம் வெறும் தண்ணி மட்டும் தான். இரண்டு மாசம் அங்கே வேலை செஞ்சோம்.. அந்த வெறும் 500 ருபாய்ல வாரம் ஒரு ஹிந்தி படம் வேற... அப்படி பாத்த முதல் ஹிந்தி படம் Mussafir - ஆனந்த தேட்டர்ல .. அந்த மாதிரி இருந்தப்போ பல சிந்தனைகள் ஓடும், Benz பார்த்தேன்.. கூட இருக்குறவன் சொல்லறான் அது 20 லச்சம் ரூபாயாம்போதும்னு அங்க இருந்து கெளம்பினேன் சென்னைக்கு..
வேற ஒரு வேலை, சம்பளம் 1500  ருபாய் மாதம். அதே இருக்குற AC எல்லாம் துடைக்கிற   வேலை ஆனா வேற வேற இடத்துக்கு பொய்... இங்க தான் எனக்கு நண்பர்கள் வந்தாங்க, என்குட காலேஜ் படித்த நண்பர்கள்.. எல்லாரும் இதே மாதிரிதான் 1000 , 1200 சம்பளம் வாங்கிகிட்டு இருந்தோம்ஒரு சின்ன ரூம் சைதாபேட்ல 5  பேரு தங்குவோம்சுத்திகிட்டு குடும்பம்.. நாங்க மட்டும் தான் bachelors .
நைட்டு மொட்ட மாடில தூக்கம்.. 15  தேதிக்கு மேல காசு இருக்காது,  பெரிய சட்டில சோறு வைப்போம் (மண்ணெண்ணெய் ஸ்டவ்லதொட்டுக்க ஊறுகாய் , தயிர் மட்டும் தான்அப்போ ஒரு நண்பன் வருவான்டேய் மாப்ளை இண்ணகி என்  Girl  Friend  பிறந்தனாளுடா 200 இருக்குடா வாங்கடா"  அவளோ தான் அன்னக்கி சறக்கு .. நமக்காகவே தொருந்து இருக்கும் டாஸ்மாக்.. அடுத்த 15 நாள்  திரும்ப அதே காசு இருக்காதுஇப்படி எல்லாம் நாங்க சந்தோசமா  இருந்தோம்..  
அதுக்கு அப்புறம் பெங்களூர் .. அதே காலேஜ் படித்த நண்பர்கள்.. கணா காணும் நாட்கள்.  முருகன், முருகையா, அருணாசலம், கருணாநிதி. எதோ வேலைக்கு போறோம் என்ற மாதிரியே இருக்குறது இல்ல.. சும்மா காலேஜ் போய்ட்டு வார மாதிரி வேலையை ரசிச்சு செஞ்சோம்.. எங்க பாஸ்-ஆதி மதுரைக்காரர்.. எங்களுக்கு அவளோ சுதந்திரம் கொடுத்தாங்க.. சம்பளம் 3000 .. என்ன செலவு பண்றோம்னு தெரியாது அனா அதே மாதிரி 15  தேதிக்கு மேல காசு இருக்காது.. நாங்க எங்க ஏரியால பண்ணாத அலம்பு கெடையாது.. இரவு 12 மணிக்கு ரோட்ல உக்காந்து பேசிகிட்டு இருக்குறது... காலைல 10  மணிக்கு ஆபீஸ் போறது..  இப்படியே.. அங்க இங்கனு 7 வருசத்துக்கு மேல ஆச்சு வேலைக்கு வந்து..
இப்போ திரும்பி பாத்தா சம்பளம் என்னமோ கூடி தான் இருக்கு கணிசமான அளவுக்கு, வாழ்க்கை தரம் கூடி தான் இருக்கு, ஆனா சந்தோசம் அப்பிடியே அதே அளவுல இருக்கு. பேங்க் இருப்புதொகை (Balance ) எவளோ தான் கூடினாலும் மறுபடியும் கீழ 0 கு வந்திடுது... வீட்ல கேக்குறாங்க "ஏன்டா 7 வருசமா வேலைக்கு போற இதுவரைக்கும் அப்பிடி என்ன உருப்படியா செஞ்சு இருக்க?" 
" உனக்கு கல்யாணம் இருக்கு, வீடு கட்டனும், காசு இருக்கா?"
உங்கள மாதிரி நானும் யோசிச்சு தான் பாக்குறேன் விடை கிடைக்க மாட்டேங்குது..

1 comment: