Thursday, 13 October 2011

500 ரூபாயுடன் 10 நாட்கள்....

சில நாளாவே இல்ல இல்ல சில மாசமாவே மனசுல இது ஓடிகிட்டு இருக்கு...
இப்போ இருக்குற விலைவாசில நடுத்தர மக்களும்கீழ்தட்டு மக்களும் வாழ்றது ரொம்ப கஷ்டமா போச்சு... 
பணம் உள்ளவர்கள் மட்டுமே வாழமுடியும் இப்ப நம்ம  நாட்டுல...  
இதையே வேற மாதிரிகுட யோசிக்க தோணுது... மக்கள எந்த எந்த தட்டுல பிரிகிறது என்பதே  புரியாம இருக்கு..
கீழ்தட்டு மக்கள்கள் யாரு? எப்படி பிரிகிறது?
நடுத்தர மக்கள்கள் யாரு? அவங்கள எப்படி பிரிச்சு பாக்க முடியுது?
பணக்காறங்க   யாரு? அப்படின அவங்க எவ்வளோ பணம் வச்சி இருபங்க???
யப்பா தல சுத்துதுடா  சாமி...
சரி எல்லாத்தையும்  விடுங்க நம்ம தலைப்புக்கு வருவோம்...
இப்போ ஒரு குறைஞ்சது 30 ஆயிரம் சம்பளம் வாங்கிற  நீங்க , நானு, நாமளா போல இருக்குறவங்க வெறும் 500 ருபாய் வச்சிக்கிட்டு எத்தன நாளு வாழ முடியும்...? இதை ஒரு சவாலா ஏத்துகிட்டு நடைமுறை படுதுன  நடத்துன எப்படி இருக்கும்? விதிமுறைகளும் உண்டு... அதையும் கொஞ்சம் பாப்போம்.. உதாரணத்துக்கு 10 நாட்கள் வச்சிப்போம்...

  1. ஒரு மாநகரமா இருக்கணும்தமிழகமா இருக்க கூடாது .... அனால் அவன் யார்கிட்டயும் உதவி கேக்ககூடாது.. 
  2. ஊர்ல இருந்து கேலம்பும் போது அவன் கிட்ட இருக்க வேண்டிய பொருட்கள்வெறும் 500  ருபாய்மாத்திக்க ஒரு துணி ,  வேணும்னா ஒரு போர்வை... அவளோதான்... அவசரகாலதுக்காக ATM கார்டுஅதை ஒரு தடவை உபயோக படுதிட்டால் திரும்ப ஊருக்கு கேளம்பிடனும் அடுத்த நிமிசமே .. தோத்து போயச்சுனு  அர்த்தம்... 
  3. செல் போன் எடுத்திட்டு போக கூடாது...
  4. பிச்சை எடுக்க கூடாதுதிருடக்கூடாதுஏமாத்தக்கூடாது ...
  5. காசு காலி ஆச்சுனா கூலி வேலை செஞ்சுதான் பொழைக்கணும்சம்பாதிசிகனும் ...
  6. யார்கிட்டயும் உங்க படிப்பு , பண பலம் பத்தி தெரியகூடாது..
முடியுமா? என்னால முதல்ல முடியுமா? முடியும்னு நினைக்குறேன்... என்ன என்ன கஷ்டங்கள் வரும்???
நம்ம இப்போ இருக்கிற வசதிகள் ஒண்ணுமே இருக்காது, ரோட்ல தான் படுக்க வேண்டி வரும், என்ன கூலி வேலை நம்மக்கு தெரியும்? சித்தாள் வேலை, மூட்டை தூக்க வேண்டி வரும், கிழிஞ்ச துணி தான் உடுத்த வேண்டி வரும், முன் பதிவு இல்லாத ரயில்தான், ஒரு வேலை சாப்பாடு கூட உழைச்சு உடம்பு வருத்தி சாபிடவேனும், வேலைக்கு அலைய வேணும், எங்க கூளிபோம் , எங்க பாத்ரூம் போவோம்?
 இது எதோ எனக்கும், சில பேர் உங்களுக்கும் மலைப்பா இருக்குதுல , அனால் இப்படி தான் பல பேர் வாழ்ந்து இருந்திகிட்டு இருக்காங்க.. இப்படி லேப்டாப் , ஏசி , பேன்மணிக்கு சாப்பாடு , இஷ்டம்போல துணி மணிகள் ... பாப்போமே இதையும் அனுபவிச்சு பாப்போமே.. 
அப்பிடி என்னதான் வாழ்ந்திகிட்டு இருக்கோம், யாருக்காக வாழ்ந்திகிட்டு இருக்கோம்?

என்ன சொல்றேங்க???? 

3 comments:

  1. The conditions you have laid are merely impossible..Aren't they? You could have atleast taken up the life of any normal educated guy/gal in a city/town. Say for an example...there is a guy who is having any white colour job in a city like chennai, you could hav targeted such being to take up this 10 days-500rs. challenge.

    But yes...I agree that is a challenging challenge. I would wish to take it up. Once someone wins this challenge that should mean he/she can lead a sustained life even at times of crisis/recessions :P

    Will let u know if i win this challenge:)

    A different thought Geja.
    Keep it up...

    ReplyDelete
  2. G8 thoughts buddy... Its very rare to find the people like you.... all the best da...
    keep blogging.............

    ReplyDelete